தமிழ்நாடு

Ranipettai | Farmers | அதிகாலையில் அதிர்ச்சி.. பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயிகள்

அதிகாலையில் அதிர்ச்சி.. பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயிகள்

thanthitv

Ranipettai | Farmers | அதிகாலையில் அதிர்ச்சி.. பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயிகள் #ranipettai #farmers #thanthitv ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே மர்மநபர்கள் நள்ளிரவில் ஏரியின் மதகை திறந்து விட்டதால் அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. சோளிங்கர் அடுத்த பாணாவரம் பெரிய ஏரி சமீபத்தில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் ஏரியின் மதகை திறந்து விட்டுள்ளனர். இதனால் ஏரியிலிருந்து வெளிவந்த நீரில் மூழ்கி பாசன கால்வாய்களை ஒட்டி பயிரிட்டு இருந்த சுமார் 300 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தன. இன்று அதிகாலை விவசாய நிலத்திற்கு சென்று நெற்பயிரை பார்த்த விவசாயிகள், பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். முட்டி அளவு நீர் தேங்கி இருந்த நிலையில் அதில் இறங்கிய நெற்பயிரை கையில் எடுத்து கண்ணீர் மல்க அழுத விவசாயிகள், ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை காலத்தில் தேவையில்லாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு