விருத்தாச்சலம் அருகே திட்டக்குடி வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகனை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு வந்து கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.