தமிழ்நாடு

"நீட் தேர்வு-தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.

தந்தி டிவி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு பகுதியை சேர்ந்த நீட் தேர்வு எழுதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி சொவுந்தர்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு என்ற அரக்கனை தமிழக அரசு ஒழிக்கும் என்றும், மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகளால் மனம் உடைந்து விடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் வீரமாக நிற்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், இவ்வளவு உயிரிழப்புக்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்