தமிழ்நாடு

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்... வெளியான வீடியோ | durai dayanidhi

தந்தி டிவி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி ஆறு மாதங்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த துரை தயாநிதி சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, உயர்ரக மருத்துவச் சிகிச்சை மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், துரை தயாநிதியின் உடலில் முன்னேற்றம் இருப்பதாக கூறிய சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம், அவர் டிஸ் சார்ஜ் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது

#BREAKING || Ambulance | அதிரடி மாற்றம் - விடிந்ததும் வந்த அறிவிப்பு

Tasmac | டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. அதிகரிக்கும் அரசு வருவாய்

🔴LIVE : Cylinder prices | Chennai | LPG | அதிர்ச்சியோடு விடிந்த காலை உயர்ந்தது சிலிண்டர் விலை..

LPG Cylinder || வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு - மக்கள் அதிர்ச்சி

BREAKING || "பரவும் தவறான தகவல் - உண்மை இதுதான்"