தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், அபாயக் கட்டத்தை அவர் கடந்துவிட்டதாகவும் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ராஜபாட்டை நிகழ்ச்சியில், எமது சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், கூப்பிட்டால் திரும்பி பார்க்கும் அளவுக்கு நினைவு வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.