தூத்துக்குடியில், காவலர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிவர் கொடிவேல். இவர் புளியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், கொடிவேல் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.