ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெயப்பிரியாவின் கணவர் ரமேஷ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், இருவருக்கும் தினந்தோறும் வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தின் போது ரமேஷ், ஜெயப்பிரியாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜெயப்பிரியா குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.