Viral Video | GOVT School கொடிக்கம்பத்தில் மதுபாட்டிலை தொங்கவிட்ட கும்பல் - ஓடிவந்த போலீஸ்
#theni #school #governmentschool #viralvideo #thanthitv
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே, அரசுப் பள்ளியில் தேசியக் கொடியேற்றும் கொடிக்கம்பத்தில் மதுபாட்டிலைக் கட்டித் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரியணம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு பள்ளியின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள்ளே சென்ற மர்ம நபர்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, காலி மதுபாட்டிலைக் கயிற்றில் கட்டி, தேசியக் கொடியேற்றும் கொடிக்கம்பத்தில் கொடி போலத் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். இன்று இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோம்பை போலீசார், மதுபாட்டிலை அகற்றினர். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக இவ்வாறு செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.