தமிழ்நாடு

சட்டவிரோதமாக போதை மாத்திரைகள்.. - திரை மறைவில் இளம் பெண்கள்

தந்தி டிவி

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 இளம் பெண்கள் உட்பட நால்வரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, கோட்டை பத்ரகாளியம்மன் பகுதிகளில் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக நின்று கொண்டிருந்த சந்தியா, சமீம் பானு என்ற இரு இளம் பெண்களையும், சேகர் ராஜா மற்றும் பசுபதி என்று இரு இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நால்வரும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவர, அவர்களிடம் இருந்து 49 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், நால்வரையும் கைது செய்த நிலையில், விசாரணையின் போது தப்பியோடிய டார்ஜன் என்ற இளைஞரை வலை வீசி தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்