தமிழ்நாடு

வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்...

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுங்கச்சாவடியில், வாகன ஓட்டி ஒருவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்த விஷால் என்பவரும் அவரது நண்பர்களும், செங்குன்றம் சுங்கச்சாவடி வழியே சென்ற போது, உள்ளூர் தான் எனக் கூறி கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விஷாலுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. சுங்கச்சாவடி ஊழியர்கள், விஷாலையும் அவரது நண்பர்களையும் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த விஷால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்