தமிழ்நாடு

முதியவருடன் மது அருந்துவதில் நட்பு.. சரக்கு தராததால் மண்டைக்கு ஏறிய வெறி - கழுத்தை அறுத்து கொடூரம்

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவரை, தனக்கு தராமல் மது அருந்தியதால் 17 வயது சிறுவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கழுநீர் ஓடை பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் 60 வயது முதியவர். இவருடன் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நட்பு கொண்டு பழகி வந்த நிலையில், இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். சம்பவத்தன்றும் இருவரும் ஒன்றாக மது அருந்த சென்ற நிலையில், சிறுவனுக்கு பங்கு தராமல் முழு மதுபானத்தையும் முதியவரே அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட சிறுவன் முதியவரை பிளேடால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்