தமிழ்நாடு

கபாலீஸ்வரர் கோவிலில் உடை கட்டுப்பாடு - டி - சர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ், கைலிக்கு தடை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும், வெளிநாட்டு பக்தர்கள் உட்பட, அனைவருக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் உள்ள மயிலை கபாலீசுவரர் கோயிலுக்கு கடந்த வாரம் வெளிநாட்டு பக்தர் ஒருவர், முறையான உடை அணிந்து வராததால், கோவில் நிர்வாகம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், விதமாக கோவிலுக்கு வரும், பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, இது குறித்த விளம்பர பலகை, கோவிலின் பிரதான நுழை வாயில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் பெண் பக்தர்கள், சேலை, ரவிக்கை, பாவாடை - தாவணி, துப்பட்டாவுடன் சுடிதார் மற்றும் பஞ்சாபி உடைஅணிந்து வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள் சட்டை, முழுக்கால் பேன்ட், ஷர்வானி ஆகிய உடைகளை அணியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி - சர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ், கைலி, அரைக்கால் பேன்ட் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி