இந்திய கடலோர காவல்படை தினம் நாடு முழுவதும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்காவில் இந்திய கடலோர காவல்படை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. தேசப்பற்று, நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஓவியங்களை தீட்டினர்.