Thiruvallur | Hospital | ``உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை போல் நாடகம்..'' | பரபரப்பை கிளப்பிய கணவர் பிரசவ மரணம் - மருத்துவமனை மீது பரபரப்பு புகார் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பிரசவத்தின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்து, போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமான ஜோதி என்ற பெண், தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது ஜோதியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவறான சிகிச்சையால்தான் ஜோதி உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய அவரது கணவர், உயிரிழந்த உடலுக்கே சிகிச்சை அளித்தது போல் நாடகமாடியதாகவும் குற்றஞ்சாட்டி, மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புதைக்கப்பட்ட ஜோதியின் உடலை தோண்டி எடுத்து முதல்வர் விஜய்யின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.