தமிழ்நாடு

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு விருது கிடையாது - பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதிரடி உத்தரவு

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு பரிந்துரை செய்ய கூடாது என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தந்தி டிவி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு , ஆசிரியர்களின் பெயர்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 5 ந் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரைக்க 4 பக்கங்கள் கொண்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளில் 17 நிபந்தனைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விதித்துள்ளார். பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் பணியில் கடமை தவறாதவராகவும், தன்னலமற்ற வகையில் தொண்டாற்றியவாக இருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி முன்னேற்றமே பெரிதென கருதும் ஆசிரியர்களை கண்டு பிடித்து பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், கல்வியினை வணிக ரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களை விருதிற்கு பரிந்துரைக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை