தமிழ்நாடு

"அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கை

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 அடுக்கு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த குழுக்கள் அரசு பள்ளிகளில் 20 உறுப்பினர்களை கொண்ட மேலாண்மைக்குழு அமைத்திட வேண்டும் என சுடலைக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலாண்மை குழுவினர், புதிய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களின் வருகைப் பதிவை தக்கவைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, லாப நோக்கில் டியூசன் எடுக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்