தரமான உணவு எங்கு உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள SAFE SERVE PORTAL என்ற வலைதள பக்கத்தை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிமுகப்படுத்தி உள்ளதாக அதன் சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உணவகங்கள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த இணையதள பக்கத்தில் பதிவு செய்யாத உணவகங்களை வணிகர்கள் தானாக முன்வந்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும் உணவகம் மற்றும், இல்லங்களில் உணவுகள் மீதமானால் 90877 90877 என்ற எண்ணிற்கு அழைத்தால் அதனை தன்னாவலர்கள் வந்து வாங்கி சென்று பசியால் தவிக்கும் மக்களுக்கு வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.