தமிழ்நாடு

"தடுக்க கூடாது" - போலீசாருக்கு வழக்கறிஞர் சங்கம் திடீர் கடிதம்

தந்தி டிவி

"தடுக்க கூடாது" - போலீசாருக்கு வழக்கறிஞர் சங்கம் திடீர் கடிதம்

#lawyer #sticker #police #barcouncil #thanthitv

பார் கவுன்சில் சார்பில் வழங்கப்படும், வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை தடுக்கக் கூடாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை மாநகர காவல் ஆணையரை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், போலி வழக்கறிஞர்களை தடுக்க, வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் சார்பில் ஸ்டிக்கர் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. காவல்துறை குறிப்பிட்டுள்ள மோட்டார் வாகன சட்டப்பிரிவுகள் நம்பர் பிளேட் குறைபாடு தொடர்பானது மட்டுமே என்றும், அந்த விதிகளை பயன்படுத்தி வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் வழங்கியுள்ள ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடிய வாகனங்களை தடுக்க கூடாது என்றும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்