கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 50 வயதான லைசாம்மா என்பவர், கடந்த 6ம் தேதி பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது 5 உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து அவரது இதயமும், சுவாசக் குழாயும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருநோயாளிக்கும், ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் கோழிக்கோட்டில் ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும் வழங்கப்பட்டது.