தமிழ்நாடு

விஷம் வைத்து 7 நாய்க்குட்டிகள் கொலை - மதுரையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

இடையூறாக இருந்ததாக கூறி மதுரையில் 7 நாய்க்குட்டிகள் விஷம் வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஏழு நாய்க்குட்டிகள் உயிரிழந்து கிடந்தன. அதே பகுதியில் துறுதுறுப்பாக சுற்றி வந்த நாய்கள் சிலருக்கு இடையூறாக இருந்ததாக நினைத்து விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. பசு மாட்டின் மீதும் ஆசிட் வீசி ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் விலங்குகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்