தமிழ்நாடு

"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்" - ராஜா செந்தூர்பாண்டியன்

தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

தந்தி டிவி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம், தினகரன் விண்ணப்பித்துள்ளார். சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'கட்சியை பதிவு செய்யத் தயார் என்று தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமமுக இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையாக சமீபத்தில், தினகரன் அமமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தினகரன் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் குறித்து தேர்தல் ஆணையம் இன்றே முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?