சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், 7-வது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதையடுத்து, அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.