மேலும் நான்கு நாட்கள் கிடைத்திருந்தால் பல சலுகைகளை அறிவித்திருப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதாகவும், அறிக்கை வெளியான பிறகு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியதில் திமுகவை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பேசினார்.