தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் - விவாதத்திற்கு எடுக்காததால் தி.மு.க. வெளிநடப்பு

சட்டப் பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக கொடுத்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பதாக கூறியிருந்தீர்கள், எனவே இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

தந்தி டிவி

சட்டப் பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக கொடுத்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பதாக கூறியிருந்தீர்கள், எனவே இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், தற்போதும் அது ஆய்வில் தான் உள்ளதாகவும், அதுகுறித்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். சட்டப்பேரவை கூட்டம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில், சபாநாயகரின் பதில் திருப்தி அளிக்காததால், திமுக வெளிநடப்பு செய்வதாக கூறி அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர இந்த அரசு அஞ்சுவதாக தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி