வாணியம்பாடியில் சட்டமன்ற தேர்தல் அன்று திமுகவினர் மற்றும் தவெகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லா பேட்டை வாக்குச்சாவடியில் தேர்தல் அன்று தவெக வேட்பாளர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், தவெகவினர் 20 மற்றும் திமுக நிர்வாகிகள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.