டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், தடையை மீறி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக தீவிரவாதி என விமர்சிப்பதா என கடும் கண்டனம் தெரிவித்தார்.