மத்திய அரசு அறிவித்துள்ள நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு, உண்மையாக வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.