தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிகட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு செயல்பாடுகளில் அரசின் நிலை என்ற விஷயத்தை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம், மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என திமுக தரப்பில் ஏற்கனவே அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும், கொரோனா மரணத்தை அரசு மறைத்ததாக எழும் குற்றச்சாட்டு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.