திமுக தலைமையில் அதன் தோழமைக்கட்சிகள் கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.