திமுக பொதுச்செயலாளராக இருந்த, பேராசிரியர் அன்பழகன் கடந்த 7ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். இதனை தொடர்ந்து திமுகவுக்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்காக வருகிற 29ஆம் தேதி திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.