தமிழ்நாடு

தேசிய மக்கள் தொகை பதிவேடு : "ரூ.4000 கோடி செலவிட வேண்டிய அவசியம் என்ன?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குடியுரிமை சட்டத் திருத்தம் 2019-ன் தாக்கம் காரணமாக, அனைத்து மதங்களுக்கு இடையேயும் வேற்றுமை மற்றும் பாகுபாட்டு உணர்வுக்கான சூழலை தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் என்ற கவலை அனைவருக்கும் எழுந்துள்ளதாக கூறியுள்ளார். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக நான்காயிரம் கோடி ரூபாயை, செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்