தமிழ்நாடு

"அதிமுக ஆட்சியில் வீசும் வெப்பத்தில் பொசுங்கி தமிழக மக்கள் வேதனை"- ஸ்டாலின்

நல்லாட்சி தரவரிசை பட்டியலில் தமிழகம் முதலிடம் என்பது மத்திய அரசின் மர்ம ஆய்வறிற்கை என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் அதிமுக ஆட்சியில் வீசும் வெப்பத்தில் பொசுங்கி வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9 துறைகளில் இரண்டு துறைகளில் மட்டும் முன்னோடியாக சொல்லப்படும் தமிழகம், எப்படி முதலிடத்திற்கு வந்தது? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.அ.தி.மு.க-பா.ஜ.க இடையே கூட்டணிக்கு அப்பாற்பட்டு ஒரு நெருக்கமான உறவு இருப்பதாக சாடிய ஸ்டாலின் தொழில், வேளாண், பொருளாதார மேலாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் தமிழகம் பின்தங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார்.தங்களுக்குப் பயன்படாத தமிழகம் சீரழியட்டும் என அதிமுக அரசுக்கு நல்லாட்சி சான்றிதழை மத்திய பா.ஜ.க. அரசு செயற்கையாக அளித்திருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தரவரிசைப் பின்னணி பற்றி, தமிழக மக்களுக்கு எழுந்துள்ள ஐயங்களை போக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாக அறிக்கையில் அவர் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை