தமிழ்நாடு

"கொரோனா காலத்திலும் நீட் தேர்வு வேண்டாம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

முறையற்ற வகையில் நடைபெறும் "நீட்" தேர்வை, இந்த கொரோனா காலத்திலும் நடத்தாமல், மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

* அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்தத் தேசமே பீதியில் முடங்கிக் கிடக்கும் நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி "நீட்" தேர்வு நடைபெறும் என்று நடைபெறும் என்று அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

* இது,மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதை காட்டுவதாக கூறியுள்ளார்.

* பல மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில்,நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை என தெரிவித்துள்ளார்.

* இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு ஆள்மாறாட்ட வழக்குகள் உதாரணம் என்று கூறியுள்ள ஸ்டாலின்,

* முறையற்ற ஒரு தேர்வை, கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

* மாநில அரசும், இத்தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு