தமிழ்நாடு

"திமுக ஆட்சியில் எத்தனை புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது" - வெளியான முழு விவரம்

தந்தி டிவி

திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 892 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது

கடந்த மே 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் எத்தனை புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன

என்பது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்ப நிலையில் அதற்கு தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் பதில் வெளியிடப்பட்டுள்ளது

அதில் கடந்த 2023 டிசம்பரில் 76 பேருந்துகளும் , 2024 ஜனவரியில் 149 பேருந்துகளும், 2024 பிப்ரவரியில் 155 பேருந்துகளும், 2024 மார்ச் மாதத்தில் 194 பேருந்துகளும் , 2024 ஏப்ரல் மாதத்தில் 136 பேருந்துகளும், 2024 மே மாதத்தில் 182 பேருந்துகளும் என 892 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல் 1,512 பேருந்துகளில் அடிச்சட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

BREAKING || தேர்தல் விதி மீறல் புகார் - வேலூர் மேயர் சுஜாதாவுக்கு சம்மன்

DMK | CPM | Chennai | Seat Sharing | தொடரும் இழுபறி.. சென்னைக்கு கணக்கு போடும் CPM..

TVK Vijay | TN Election | ``மும்பையில் விஜய் கூட பேசுறாங்க.. கூட்டணியில் பெரிய மாற்றம் வரலாம்.."

BREAKING || எந்தெந்த தொகுதிகளில் போட்டி? - அதிரடியாக அறிவித்து அதிரவிட்ட அதிமுக

ADMK | NDA "கூட்டணி குறித்து பேச தமிழகம் வராத அமித்ஷா? முக்கியமான காரணம் இதுதான்" - நாகராஜ்