தமிழ்நாடு

கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு தற்போது சரியாக உள்ளதா? - முதலமைச்சருக்கு துரைமுருகன் கேள்வி

கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதை எதிர்த்த அதிமுக அரசு, தற்போது, அதே திட்டத்தை கொண்டு வருவது ஏன் என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

கடந்த ஒன்றாம் தேதி சென்னை கொடுங்கையூரில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, சொந்த செலவில் குழாய் அமைக்க புட்டபர்தி சாய்பாபா முன்வந்ததாகவும், அதை அதிமுக அரசு அப்போது எதிர்த்ததாகவும் கூறியுள்ளார்.

கண்டலேறு முதல், பூண்டி வரை நிலச்சரிவு சரியாக இல்லை என அன்று அதிமுக அரசு, காரணம் கூறியதாக குறிப்பிட்டுள்ள துரைமுருகன், தற்போது அது சரிசெய்யப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். இது முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்ததல்ல என்று கூறியுள்ள அவர், திட்டத்தை நிறைவேற்ற மூன்றாயிரம் கோடி ரூபாய் ஆகும் என்கிறார்கள என கூறியுள்ளார்.

அன்றே திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், அரசுக்கு பணமும் மிச்சம், இத்தனை நாள் தண்ணீர் முழுமையாக வந்திருக்கும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை அதிமுக அரசு தற்போது செயல்படுத்த நினைப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு