தமிழ்நாடு

தோழமை கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு - இறுதி செய்யும் பணியை தொடங்கியது, திமுக

தோழமை கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்யும் பணியில், திமுக தீவிரமாக இறங்கி உள்ளது.

தந்தி டிவி
திமுக கூட்டணியில் காங்கிரஸ்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்,அதற்கான வாய்ப்பு தற்போது குறைந்து விட்டது.இதையடுத்து மற்ற தோழமை கட்சிகளான மதிமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள்,மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்யும் பணியை திமுக தீவிரப்படுத்தி உள்ளது.மதிமுகவுடன் இன்று தொகுதி உடன்பாடு எட்ட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.அதைத் தொடர்ந்து திமுகவின் மற்ற தோழமை கட்சிகளையும் அழைத்து தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படுகிறது.இதற்கிடையே திமுக கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்