தமிழ்நாடு

"ஊழல்வாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று அறிவித்த தலைவர், கருணாநிதி என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் புதுக்கோட்டையில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகள், மிசா போராட்டத்தில் கலந்துகொண்ட 250 பேருக்கு பொற்கிழி வழங்கினார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று அறிவித்த தலைவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தற்போது உள்ள அதிமுக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை எடுக்காததால், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். மரணத்தில் கூட பொய்க் கணக்கு காட்டிய அரசையும், ஊழல்வாதிகள் இடமிருந்து தமிழ்நாட்டையும் மீட்பதற்காக தான், நாம் இந்தப் போரை தொடங்கியுள்ளோம், என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்