தமிழ்நாடு

கந்துவட்டி புகார் - திமுக பிரமுகர் கைது

கந்துவட்டி புகாரில் திமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பாஸ்கர், திமுக வட்டச் செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாஸ்கரின் அலுவலகத்தை அப்பகுதியை சேர்ந்த சசிக்குமார், மணிகண்டன் ஆகியோர் தாக்கியதை அடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், சசிகுமார் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு பாஸ்கர் அதிக வட்டி கேட்டதை அடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதனால் பாஸ்கரின் அலுவலகத்தை சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, கந்துவட்டி புகாரில் பாஸ்கரை போலீஸார் கைது செய்தனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்