#dmk #boothagent #tnelection2026 வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த பூத் ஏஜென்ட் கைது திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கீழ்பாலூர் வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக திமுக பூத் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்... கீழ்பாலூர் வாக்குச்சாவடி எண் 193ல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திமுக முகவர் வெங்கடேசன் என்பவர் திடீரென கட்டுப்பாட்டு கருவியினை கீழே போட்டு உடைத்தார். இதனால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், பெல் நிறுவன பொறியாளர்கள் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது என உறுதி செய்தனர். இதையடுத்து, புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு காலை 10.20 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இயந்திரத்தை உடைத்த வெங்கடேசனை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.