தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று மாலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர். தற்போது, ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் கு.க.செல்வம், கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள அவர், பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில், இன்று அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் இணையும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளதாவும் கூறப்படுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த வி.பி.துரைசாமி, அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்