ஆளுநர் உரை மீதான பொது விவாதத்தில் பேசி முடித்த திமுக உறுப்பினர் அன்பழகன், ஆளுநர் உரையை கிழித்து, சபாநாயகர் முன்பாக வீசினார். இதையடுத்து அவரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக நீக்கி வைத்து, சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்த நிலையில்
பட்ஜெட் தாக்கல் மற்றும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அன்பழகனுக்கு பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், 9- ஆம் தேதி வரை மட்டும் நீக்கம் செய்தால் போதுமானது என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் கூட்டதொடரில் பங்கேற்பதில் இருந்து, அன்பழகனை நீக்கி வைத்து உத்தரவிட்டுள்ளார்.