தமிழ்நாடு

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, திமுக சார்பில் அனைத்துக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், இந்திய

கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்