உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற நிர்வாகிகளுக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அங்கு வந்த விஜயகாந்தை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று விஜயகாந்த்- பிரேமலதா தம்பதியின் திருமண நாள் என்பதால் மேடை ஏறி அமர்ந்ததும், அவர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். தொண்டர்களின் கைத்தட்டலுக்கு இடையே பேசிய விஜயகாந்த், மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன் என்றார்.