சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் வீட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்றார். சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், சுபஸ்ரீ இழப்பு தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.