தமிழ்நாடு

தீபாவளி நேரம் அடிக்க பார்த்த விபூதி..ரயில் முன்பதிவில் தனியார் நிறுவனம் செய்த உலகமகா உருட்டு சம்பவம்

தந்தி டிவி

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய நகரங்களுக்கு நவம்பர் 9 முதல் 13 வரை 6 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அந்த நிறுவனம் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பயணங்களுக்கான டிக்கெட் கட்டணத்தையும் அறிவித்துள்ள அந்த தனியார் நிறுவனம் முன்பதிவையும் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்ல ஏசி வகுப்புகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தனியார் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுமதி வழங்குவதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ரயில் டிக்கெட் காண முன்பதிவு துவங்கியிருப்பதும் , வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது வலைதள பக்கத்தில் இந்த அறிவிப்பை நீக்கிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை