தமிழ்நாடு

2வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் - நேற்று ஒரேநாளில் 90,000 பேர் பயணம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தந்தி டிவி

நேற்று தினமும் இயங்க கூடிய 2 ஆயிரத்து100 பேருந்துகளுடன், 3 ஆயிரத்து 506 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பேர் பயணம் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 97 ஆயிரத்து 717 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். நாளை வரை 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் 6 மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகளும், ஊர் திரும்ப 17 ஆயிரத்து 719 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். அதன்படி முதல் நாளான நேற்று வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2491 பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், பூந்தமல்லி, தாம்பரம் பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?