தமிழ்நாடு

தீபாவளி சிறப்பு பேருந்து : அக். 23 - ல் முன்பதிவு துவக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு, அக்டோபர் 23 ம் தேதி துவங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு, அக்டோபர் 23 ம் தேதி துவங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும், மொபைல் கழிவறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், வேலூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்தும் திருவண்ணாமலைக்கு தாம்பரத்தில் இருந்தும் பேருந்துகள் புறப்படும். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், வழக்கம் போல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்து மூலம் செல்லலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்