தமிழ்நாடு

தீபாவளி பண்டிகைக்கு வந்த புதுவரவு பட்டாசுகள்

தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை பட்டாசும் மத்தாப்பும் ஜொலிக்க குதூகலமாக இருப்பவர்கள் குழந்தைகள் தான்.

தந்தி டிவி

* தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை பட்டாசும் மத்தாப்பும் ஜொலிக்க குதூகலமாக இருப்பவர்கள் குழந்தைகள் தான். அதிக அளவில் ஒலி எழுப்பும் பட்டாசுகள் இளைஞர்களின் விருப்பமாக இருக்கும் போது, புத்தாடை அணிந்து கைகளில் கம்பி மத்தாப்புகளை எடுத்துக் கொண்டு வாய் நிறைய புன்னகையோடு இருக்கும் சிறுவர்களை பார்ப்பதே அழகு.

* சிறுவர்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்த ஆண்டு தீபாவளி புதுவரவில் கம்பி மத்தாப்புகள் அசத்தலாக வந்திருக்கிறது.. கம்பி மத்தாப்புகள் என்றால் ஒரே சைஸில், ஒரே வண்ணத்தில் தான் இருக்கும் என்பதை மாற்றும் வகையில் இந்த ஆண்டு ஏகப்பட்ட வெரைட்டிகள் வந்திருக்கிறது.

* 7 சென்டி மீட்டர் முதல் 75 சென்டி மீட்டர் வரையிலான கம்பி மத்தாப்புகள் இந்த ஆண்டு சந்தைக்கு புதுவரவு... அதேபோல் லெமன் டிராப்ஸ் என்ற பெயரில் புதுவரவு கம்பி மத்தாப்பு வந்திருக்கிறது.

* ஒரு கம்பி மத்தாப்பை கொளுத்தினால் ஒரு வண்ணத்தில் பொறிந்து கொட்டும் என்பது தெரிந்தது தான். ஆனால் இந்த ஆண்டு புதுவரவாக 5 வண்ணங்களில் மாயாஜாலம் காட்டும் வகையில் கம்பி மத்தாப்புகள் வந்திருப்பது குழந்தைகளுக்கு கொண்டாட்டமான விஷயம்.

* இதுபோல் வண்ணங்கள் நிறைந்த பட்டாசுகள் குழந்தைகளின் தீபாவளியை கூடுதல் ஒளிமயமாக்கும் என்பது நிச்சயம்...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு