தமிழ்நாடு

"குழந்தைகளை கவர இந்தாண்டு தீபாவளிக்கு 20 வகையான புதிய பட்டாசுகள்"

தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் குழந்தைகளை கவர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

தந்தி டிவி

தீபாவளிக்கு 24 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி இறுதி கட்டப்பணி சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.

குழந்தைகளைக் கவரும் வகையில் KINDER JOY TITAN PARADISE COLOUR BALL HITECH போன்ற 20-க்கும் மேற்பட்ட புதுவகையான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்தனர்.

ஏழு முதல் 75 செ.மீ வரை அளவு உள்ள வண்ண வண்ண கலர்களில் கம்பி மத்தாப்புக்களும் , புது வரவாக 4 வண்ணங்களை கொண்ட ஒரே கம்பி மத்தாப்புக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உண்மையான துப்பாக்கி போன்று விற்பனைக்கு வந்து உள்ள விதவிதமான துப்பாக்கிகளுக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாகவும், இளைஞர்களை கவரும் வகையில் சமூக வலை தளங்கள் பெயர்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதியினருக்கு என பிரத்தியேகமாக 50 அடி உயரம் வரை சென்று வெடிக்கும் வகையில் இதய வடிவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு