தமிழ்நாடு

ஜிபேவில் பணம் அனுப்பியதில் தகராறு - நடுரோட்டில் அடிதடி

ஜிபேவில் பணம் அனுப்பியதில் தகராறு - நடுரோட்டில் அடிதடி

thanthitv

சென்னை போரூரில், பெட்ரோல் நிரப்பியதற்கான பணத்தை ஜிபே மூலம் சிறுகச் சிறுக அனுப்பிய இளைஞருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

300 ரூபாய்க்குப் பெட்ரோல் நிரப்பிய இளைஞர், ஜிபேவில் பணத்தைச் சிறிது சிறிதாக அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர், பணம் செலுத்திவிட்டுச் சென்ற இளைஞரைத் துரத்திச் சென்று பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, இருவரும் சாலையின் நடுவே ஹெல்மட்டைக் கழற்றி ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#chennai #porur #violance #thanthitv

BREAKING || சென்னையில் பெரும் சோகம்... பேச்சு மூச்சு இல்லாமல் பிரிந்த இருவர் உயிர்

High Court | HRCE | Sathya Gnana Sabai | வள்ளலார் சபை நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

BREAKING || நாடே பரபரக்கும் விவகாரம் - சுப்ரீம் கோர்ட் சென்ற ராகுல்

High Court | Police | Anbil Mahesh | அன்பில் மகேஷ் வழக்கில் திடீர் திருப்பம்.. போலீசார் அதிரடி மூவ்

BREAKING || கோவை செல்லும் CM விஜய் - இது லிஸ்ட்லயே இல்லையே... அதிரவிடும் பிளான்